Under the skin

Dev.D (2009)

மறுமொழி இடுக »

அதே பழைய தேவதாஸ் கதை தான், ஆனால் செம புதுமையா எடுத்து இருக்கார் அனுராக் கஷ்யப். ‘உன் மதிவதன சந்திர பிம்பத்தை பார்த்தால்…’,'பிரிந்து சென்று என்னை பரிதவிக்க விடாதே…’ மாதிரியான நாடகத்தனமான வசனம் எல்லாம் எதுவும் இல்லை. நிறைய வசனம் ரொம்ப பச்சையா இருக்கும், தயாரா இருங்க. சொல்ல போன எனக்கு படம் பிடிச்சதுக்கு அதுவும் ஒரு காரணம். நாம பழைய தேவதாஸ் படங்கள் பாக்கும் போது நமக்கு தோன்ற கேள்விகளுக்கு பதில் தந்த மாதிரி இருக்கு. படத்துக்கான போஸ்டர் (Dev.D) வடிவமைப்பு நச்சுனு இருக்கு.

DevD-1

கதையை 1920ல இல்லாம 2008ல வைத்து எடுத்தால் தான் படம் இந்த அளவுக்கு நல்லா இருக்குது. அத்தோட, படத்துல சமகாலத்துல நம்மள அதிர வைத்த செய்திகள்ல புகுத்தியும், சந்திரமுகியை ஏதோ ஒரு விலைமாது என்று சொல்லி விட்டுடாம, அவளோட கதையையும் (விலைமாதான காரணத்தையும்) சொல்லியது படத்திற்கு பலம்.

அபை தியோல் தான் படம் முழுக்க வர்றார், சர்வ சாதரணமா தேவ் பாத்திரத்துல பின்னிட்டார். சந்திரமுகியா நடிச்ச கல்கி கேக்லன் (Kalki Koechlin) முதல் படத்துலையே இப்படி நல்ல பத்திரம் கிடைச்சு நடிக்குறது, கெத்து! படத்துல தமிழ், பிரெஞ்சு மொழிகள்ல பேசி கலக்குறார், விசாரிச்சதுல பொண்ணுக்கு புதுச்சேரி பக்கம். இங்க, இவங்களும் பட இயக்குனரும் இப்போ ஜோடியா சுத்துற, வயித்தெரிச்சல் செய்திய சொல்லிக்குறேன்.

DevD-2

இது வழக்கமான பாலிவுட் படம் கிடையாது, பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்.

Written by வெங்காயம்

மே 24, 2009 இல் 1:19 பிற்பகல்

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.