Under the skin

மரியாதை (2009)

ஒரு மறுமொழியுடன்

விஜயகாந்த் இரட்டை வேடம், காமெடிக்கு ரமேஷ் கண்ணா, சமையல், ஜோசியம் பற்றி ஒரு சில நகைச்சுவை காட்சிகள், ‘லா லா…’ பின்னிசை, இதெல்லாம் எதிர்பார்த்து தான் படத்தை பார்க்கவே சென்றேன். ஆனால் இதுக்கு முன்னாடி இயக்குனர் விக்ரமன் எடுத்த பல படங்களை மறுபடியும் வேற நடிகர்களை வச்சா எடுப்பார்? விஜயகாந்தையும் மீரா ஜாஸ்மினையும் ஒன்ன பாக்க சகிக்கலை, முக்கியாயமா பாடல் காட்சிகள்ல(வெள்ளைக்கார பொண்ணுகளை எல்லாம் ஆட வைக்குறாங்க). எல்லாம் நம்ம தலைவிதி.

Mariyathai

விஜயகாந்த் குடும்பம் ஒரு காலத்துல வசதியா வாழ்ந்தவங்க, எல்லோரும் அநியாயத்துக்கு நல்லவங்க. அவங்க வீட்டுக்கு மீரா ஜாஸ்மின் விருந்தாளியா வாராங்க. சின்ன விஜயகாந்த் வெறுப்போட திரியறார். ஏன்னு விளக்க ஒரு flashback. அதில் மீனா காதலிப்பது போல் நடித்து ஏமாற்றுகிறார். மீரா ஜாஸ்மின் இன்னொரு flashback சொல்றாங்க , அதுக்கு அப்பொறம் விஜயகாந்த காதலிக்குறாங்க.

கோகுலம், சூரியவம்சம், உன்னை நினைத்து, உன்னிடத்தில் என்னை குடுத்தேன், என்று வரிசையா அவர் எடுத்த படமா நினைவுக்கு வருது.

ஒரு ஏமாத்துற பெண், ஏமாற்றப்பட்ட பாவமான கதாநாயகன், அவர காதலிக்க ரொம்ப நல்ல கதாநாயகி வந்து குடும்பத்துக்கு உதவி செய்றாங்க, ஒரே மாதிரியான நகைச்சுவை காட்சிகள். விக்ரமன் சார் இன்னும் எத்தனை வருசத்துக்கு இது போல படமா எடுத்துட்டு இருப்பீங்க? இந்த படம் 1995ல வெளி வந்த்திருந்தா நல்ல இருந்திருக்கும், இப்போ ரொம்ப கஷ்டம்! தொலைக்காட்சில வர்ற நெடுந்தொடர்கள் கூட கொஞ்சம் சிந்திச்சு எடுக்குறாங்க…… இதுக்கு மேல சொல்லுராப்புல படத்துல ஒண்ணும் இல்லை.

ஓசில டிக்கெட் கிடைச்சாலும் போக வேணாம்.

Written by வெங்காயம்

மே 31, 2009 இல் 6:21 மு.பகல்

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. nice comments :)

    sathees kannan

    ஜூன் 1, 2009 இல் 9:06 மு.பகல்


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.