Archive for ஜூன் 2009
நியுட்டனின் மூன்றாம் விதி (2009)
S.J. சூர்யா தான் நாயகன், விளம்பரப் புகைப்படங்கள், நாயகியின் கவர்ச்சி இதெல்லாம் வைத்து படத்தை தவறாக எடை போட்டு விட்டேன். S.J. சூர்யா ரொம்பவும் தேறிவிட்டார், இந்த படத்தில் தான் “ஏன் தான் இவரெல்லாம் ஹீரோவா நடிக்குறார்” என்று தோணாமல் இருந்தது. ராஜீவ் கிருஷ்ணா, வில்லன் பாத்திரத்தில் பொருத்தம்.
படம் துவங்கும் போதே ராஜீவை பழிவாங்கும் கதை என்று தெரிந்து விடுகின்றது. அதுவும் ராஜீவை இரண்டு மணிநேரத்தில் கொல்லப் போவதாக முன்கூட்டியே சொல்லியும் விடுகிறார். 24 என்னும் ஆங்கிலத் தொடரின் பாணியில் படத்தின் மீதி இரண்டு மணிநேரத்தையும் கதையையும் சாதுர்யமாக நகர்த்தியுள்ளனர். இங்கு கதையை சொல்லி கெடுக்க விரும்பவில்லை.
பிடித்தது
- விறுவிறுப்பான திரைக்கதை. தாய்முத்துசெல்வன் – முதல் பாலிலேயே sixer
- பழிவாகும் படலத்தை யோசித்து எழுதியுள்ளார்கள்
- ராஜீவை ஏதோ பேருக்காக இல்லாமல், சிந்திக்கும் வில்லனாக உருவாக்கியது. அவருடைய அடியாளும் சிந்தித்து உதவி செய்கிறார். படத்துக்கு விருவிருப்புட்டுவதே இது தான்.
- சூர்யா போட்ட திட்டமெல்லாம் அப்படியே நடக்காமல், பிரச்சனை வரும் போது புத்தியை பயன்படுத்தி improvize செய்வது
- ஒரு காட்சியில் கூட சூர்யா சண்டை போடமாட்டார்
பிடிக்காதது
- பாடல்கள் – சத்தியமா இது இல்லாம இருந்திருந்திருக்கலாம்
- ஷயாலியின் நடிப்பு கொடுமை. இதற்கு மேலும் எதிர்பார்க்க முடியாது தான்
- காதல் காட்சிகள் நன்றாக இருந்தாலும், காதல் வந்த காரணம்(அநாதைகள் ஆசிரமம்) கொஞ்சம் மொக்கை தான்
பார்க்கலாம் – நல்ல பொழுதுபோக்கு!
